Tamil

‘பாரபட்சத் தடுப்பு NSW’ (Anti-Discrimination NSW)

 நாங்கள்‘பாரபடசத் தடுப்பு சட்டம் 1977’ (Anti-Discrimination Act 1977)-ஐ நிர்வகிக்கும் அரச அமைப்பாவோம். பின்வருவன மூலம், நியூசவுத் வேல்ஸ்- இல் பாகுபாட்டினை இல்லாதொழிக்க நாங்கள் இலவச சேவைகளை வழங்குவதுடன், கடும்முயற்சிகளையும் மேற்கொண்டுவருகிறோம்: 

  • விசாரணைகளுக்குப் பதிலளித்தல்  
  • முறைப்பாடுகளைச் சமரசம் செய்தல் 
  • பாகுபாடு மற்றும் அதன் பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துதல் 
  • குறித்த வேலைகள், திட்டங்கள், சேவைகள் அல்லது வசதிகள் போன்றவற்றிற்கான வாய்ப்புகளை மேம்படுத்துவதற்குக் குறித்த மக்கள் குழுக்களுக்கு ஆதரவுதவி அளிப்பதை அனுமதிப்பதற்குச் சட்டத்திலிருந்து விலக்களிப்பதற்காக விண்ணப்பங்களை நிர்வகித்தல்
  • பாகுபாட்டுப் பிரச்சினைகள் பற்றி அரசாங்கத்திற்கு அறிவித்தல்

பாகுபாடு என்றால் என்ன? 

நியூசவுத் வேல்ஸ் மாநில சட்டத்தால் பாதுகாக்கப்படும் தனக்கேயுரித்தான ஒரு தனிப்பண்பை ஒருவர் கொண்டிருப்பதன் காரணமாக, அல்லது அவர் அதைக் கொண்டிருப்பதாக ஊகிக்கப்படுவதன் காரணமாக நியாயமற்ற முறையில் நடாத்தப்படுதல் பாகுபாடாகும். 

இதன் தனிப்பண்புகள் ஆவன: 

  • இயலாமை (நோய்களும், சுகவீனங்களும் உள்ளடங்க) 
  • பாலினம் (கர்ப்பம் மற்றும் தாய்ப்பாலூட்டல் இதில் அடங்கும்) 
  • இனம் 
  • வயது  
  • திருமண அல்லது வீட்டு நிலவரம் 
  • ஓரினக்-கவர்ச்சி 
  • திருநங்கையாக இருத்தல்
  • பராமரிப்பாளருடைய பொறுப்புகள் 

குறிப்பிட்ட பொது இடங்களில் பாகுபாடு காட்டுதல் சட்டத்திற்கு முரணானது. பொது இடங்களாவன: 

  • வேலையிடங்கள் 
  • கல்வி அமைப்புகள் 
  • பொருட்கள், சேவைகள் வழங்கப்படும் இடம் 
  • வீட்டுவசதிகள் வழங்கப்படும் இடம்  
  • பதிவுசெய்யப்பட்ட குழுமங்கள் (‘க்ளப்’புகள்). 

ஒருவரைப் பராமரிக்கும் பொறுப்புகளுள்ள ஒருவரை பாகுபாட்டுடன் நடத்துவதென்பது வேலையிடத்தில் மாத்திரம் சட்டத்திற்கு முரணானது. 

பாலியல் தொல்லை

ஒருவருக்குப் பாலியல்தொல்லை கொடுப்பது சட்ட விரோதமானதாகும். ஒருவரைப் புண்படுத்தும், அவமானப்படுத்தும் அல்லது பயமுறுத்தும் பாலியல் தன்மைகொண்ட வரவேற்கத்தகாக எந்தவொரு நடத்தையும் பாலியல் தொல்லையாகும். 

பின்வருவன இதில் உள்ளடங்கலாம்:

  • பாலியல் நோக்க முன்னெடுப்புகள்
  • பாலியல் சார் தயவுகளை வேண்டுதல்
  • பாலியல் ஜாடைகள், வேடிக்கைப் பேச்சுகள் அல்லது கருத்துகள்

இழிவுபடுத்துதல் 

இழிவுபடுத்துதல் என்பது, வெறுப்பு, பாரதூரமான அவமரியாதை அல்லது ஒருவரைப் பார்த்து அல்லது ஒரு குழுவினரைப் பார்த்து ஏளனம் செய்யத் தூண்டவல்ல ஒரு பகிரங்கமான செயலாகும். ஒருவரிடமிருக்கும் சில தனித்தன்மைகள் குறித்து அவமானப்படுத்துதல் சட்டவிரோதமானதாகும். 

இதன் தனிப்பண்புகள் ஆவன:

  • இனம்
  • மதம்
  • ஓரினக்-கவர்ச்சி
  • திருநங்கையாக இருத்தல்
  • HIV/AIDS ஆல் பீடிக்கப்பட்டிருத்தல்

இனம், மதநம்பிக்கை அல்லது அத்துடனான இணைப்பு, பாலியல் நிலவரம், பால் அடையாளம், இருபாலாருடைய உறுப்புகளை ஒருவர் கொண்டிருத்தல், அல்லது HIV/AIDS ஐ கொண்டிருத்தல் காரணமாக மக்கள் குழு ஒன்றிற்கெதிராகப் பயமுறுத்தும் அல்லது வன்முறையைத் தூண்டும் எந்தவொரு பகிரங்கச் செயலும் ஒரு குற்றச்செயலாகும் என்பதுடன் கட்டாயமாகக் காவல்துறைக்கு அறிவிக்கப்படவேண்டியதாகும்.

பலியாக்கல்

நீங்கள் பாகுபாடு குறித்து ஒரு முறையீட்டினைச் செய்ததன் காரணமாக அல்லது பாகுபாடு குறித்த ஒரு முறைப்பாடு பற்றிய தகவலையோ அல்லது சான்றினையோ வழங்கியதன் காரணமாக நியாயமற்ற முறையில் நடாத்தப்பட்டால், இது ஒரு பழிவாங்கலாக அறியப்படும். நியூ சவுத் வேல்ஸ்-இல் பழிவாங்கல் சட்டமுரணானதாகும்.

பாகுபாட்டிற்கு நீங்கள் ஆளானால் என்ன செய்வது

‘பாரபட்சத் தடுப்பு NSW’ (Anti-Discrimination NSW) விசாரணை சேவையை 02 9268 5544 அல்லது 1800 670 812 ஊடாக அல்லது adbcontact@justice.nsw.gov.au எனும் மின்னஞ்சல் வழியாகத் தொடர்புகொள்ளவும். உங்களின் நிலவரம் அல்லது உங்களுக்கு நடந்தவை சட்டமுரணானதா என்பது குறித்து உங்களுக்கு நிச்சயமாகத் தெரியாதுவிட்டால், அல்லது ‘பாரபட்சத் தடுப்பு NSW’ (Anti-Discrimination NSW)-இற்கு எதிரான சட்டங்கள் பற்றிய சில தகவல்களை அறிய நீங்கள் விரும்பினால், நீங்கள் எம்முடன் தொடர்புகொள்ளலாம். 

பாகுபாடு, பாலியல் தொல்லை அல்லது இழிவுபடுத்தல் போன்றவற்றை நீங்கள் அனுபவித்தால், மற்றும் ஒரு நபர் அல்லது நிறுவனம் குறித்து சம்பிரதாயப்படியான முறைப்பாடு ஒன்றினை மேற்கொள்ள நீங்கள் விரும்பினால், தயவுசெய்து எமது முறைப்பாட்டுப் படிவத்தை உபயோகிக்கவும். எந்த மொழியிலும் உங்களின் முறைப்பாட்டை நீங்கள் எழுதலாம், உங்களுக்குச் செலவின்றி நாங்கள் உங்களின் முறைப்பாட்டினை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்போம். Complaintsadb@justice.nsw.gov.au-க்கு உங்களின் முறைப்பாட்டினை மின்னஞ்சல் செய்யவும். உங்களின் முறைப்பாட்டை எழுதுவது உங்களுக்குக் கடினமாக இருந்தால், உங்களின் முறைப்பாட்டைச் சமர்ப்பிப்பதற்கான வேறு விருப்பத்தேர்வுகள் குறித்து கலந்துரையாடுவதற்கு நீங்கள் எம்முடன் தொடர்புகொள்ளலாம். 

எமது சேவையொன்றினைப் பெறுவதற்கு, 131 450 -இல் மொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயர்ப்புச் சேவையைத் தயவுசெய்து தொடர்புகொண்டு 02 9268 5544-இல் ‘பாரபட்சத் தடுப்பு NSW’ (Anti-Discrimination NSW)-ஐ அழைக்குமாறு கேளுங்கள்.

உங்களுக்கு சட்ட உதவி தேவையானால், 1300 888 529-இல் ‘சட்ட உதவி அணுகல்’ (Law Access) சேவையுடன் தொடர்புகொள்ளவும்.

பாகுபாடு, அல்லது பழிவாங்கல் போன்றவற்றை நீங்கள் அனுபவித்திருந்தால், நி.ச.வே காவல்துறையுடன் தயவுசெய்து தொடர்புகொள்ளவும்.

‘பாரபட்சத் தடுப்பு NSW’ (Anti-Discrimination NSW)-இல் ஒரு முறைப்பாட்டை நீங்கள் தாக்கல் செய்யும்போது என்ன நடக்கிறது?

நீங்களும், மற்றைய தரப்பினரும் ஒரு தீர்வைக் காண்பதற்கு உதவுவது எமது பங்காகும். உங்களது முறைப்பாட்டை நாம் பெற்றுக்கொள்ளும்போது, அது சட்டத்திற்கு முரணான ஒரு நிலவரமாகக் காணப்பட்டால், உங்களுடைய முறைப்பாட்டினை அடுத்த கட்டத்திற்கு நாம் முன்னகர்த்துவோம்.

உங்களுடைய முறைப்பாடு கிடைக்கப்பெற்று இரண்டு வாரங்களுக்குள் தொலைபேசி அல்லது கடிதம் வாயிலாக உங்களுடன் நாங்கள் தொடர்புகொள்வோம். உங்களுடன் நாம் பேசும்போது, எமக்குத் தேவைப்படும் வேறு எந்தவொரு தகவலையும் நாம் கேட்கக்கூடும். உங்களின் முறைப்பாட்டை கையாளுவதற்கு எவ்வாறு நாம் திட்டமிடுகிறோமென்பதைக் குறித்தும் நாம் கலந்துரையாடுவோம்.

நீங்கள் யாரைப்பற்றி முறைப்பாடு செய்கிறீர்களோ அந்த நபர் பிரதிவாதியென அழைக்கப்படுவார். உங்களுடைய முறைப்பாட்டின் ஒரு பிரதி மற்றும் நீங்கள் வழங்கிய ஏதேனும் படிவங்கள் என்பவற்றுடன் சேர்த்து தொடர்புபட்ட சட்டத்தினை விபரித்து எம்மிடமிருந்து ஒரு கடிதத்தையும் நாங்கள் பிரதிவாதிக்கு அனுப்புவோம். இதன் காரணமாக, பதில் ஒன்றினை வழங்குவதற்கான வாய்ப்பு ஒன்றினைப் பிரதிவாதி பெறுவார்.

இது நிலைமையைத் தீர்த்துவைக்காதுவிட்டால், உங்களுக்கும் பிரதிவாதிக்குமிடையிலான ஒரு சந்திப்பினை நாங்கள் ஏற்பாடு செய்யக்கூடும். இது சமரசத்திற்கான ஓர் ஆலோசனைக் கூட்டம் என அழைக்கப்படும். சமரசம் என்பது, ஒரு முறைப்பாட்டினைத் தீர்த்துக்கொள்ள இரண்டு தரப்பினரும் ஒன்றாகக் கூடி, கலந்துரையாடுவதற்கான ஒரு சந்தர்ப்பம் ஆகும். 

எங்களால் பக்கம் சாரவோ அல்லது சட்ட ஆலோசனை தரவோ முடியாது. நீங்கள் இந்த விடயத்தைத் தீர்த்துக்கொள்ள எங்களால் உங்களுக்கு உதவ முடியாதுவிட்டால், உங்களுடைய முறைப்பாட்டை ‘நி.ச.வே. குடியியல் மற்றும் நிர்வாக நியாயமன்று’ (NSW Civil and Administrative Tribunal)-க்கு நீங்கள் எடுத்துச்செல்லலாம்.

முறைப்பாட்டுப் படிவத்தினை தரவிறக்கம் செய்யுங்கள். 

Last updated:

24 Jan 2024

Was this content useful?
We will use your rating to help improve the site.
Please don't include personal or financial information here
Please don't include personal or financial information here

We acknowledge Aboriginal people as the First Nations Peoples of NSW and pay our respects to Elders past, present and future. We acknowledge the ongoing connection Aboriginal people have to this land and recognise Aboriginal people as the original custodians of this land.

Top Return to top of page Top